ப - வரிசை 13 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
போலிஸ் | காவல்துறை |
புதிர் | மர்மம் |
ப்ருஹதீஸ்வரர் | பெருவுடையார் |
பௌர்ணமி | முழுமதி |
பாதம் | அடி |
பாலன் | சிறுவன் |
பிரகதீஸ்வரர் | பெருவுடையார் |
பவஒளஷதீஸ்வரர் | பிறவிமருந்திறைவர் |
பஞ்சநதீஸ்வரர் | ஐயாற்றார் |
பக்குடுக்கச் சாயனா | பல்குடுக்கை நன்கணியார் |
பிங்களா | பிங்கலை |
பிட்டம் | மனிதனின் அடி முதுகுக்கு கிழ் உள்ள பாகம் |
பெண்குறி | உடலுறவுக்கும்,சிறுநீர் கழிக்கவும் பயன்படும் பெண்ணின் உடல் உறுப்பு |
புன்சிரிப்பு | ஒலி எழுப்பாமல் உதடு விரிய மெல்லச் சிரித்தல்; ஒலி எழுப்பாத சிரிப்பு |
பிரச்சாரம் | பரப்புரை |
பிரேமம் | காதல் |
பிரேமை | பிரேமம் |
பண்டிதர் | புலவர் |
பண்டிட் | பண்டிதர் |
பிரதமர் | தலைமை அமைச்சர் |