ப - வரிசை 1 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பூனை

பூனை வீட்டில் வளர்க்கப்படும் ஒரு விலங்கு ஆகும்.
புலி,சிறுத்தை போன்ற விலங்குகள் பூனை இனத்தை சேர்த்தவையாகும்

பார்

உலகம்

போர் கருவி

போரில் பயன்படுத்தும் கருவி
(ஒருவரைத்) தாக்கி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் கருவி

பரவெளி

விண்வெளி

பணிவிடை

முறை கருதிச் செய்யப்படும் செயல்

பயன்

நன்மை
வசதி

பண்டிகை

திருநாள்
பெருநாள்

பஞ்சாயத்து

ஊராட்சி

புருஷன்

கணவன்; ஆண்

பிரேதம்

பிணம்

பிரகாரம்

திருச்சுற்று

பிரயாணம்

பயணம்

பத்திரிகை

ஏடு
செய்தித்தாள்
இதழ்

பரீட்சை

தேர்வு
சோதனை

பிரதி

படி

புஷ்பம்

மலர்
பூ

பொக்கிஷம்

கருவூலம்

பீடம்

மேடு
மேடை

புனர்

மறு (புனர்வாழ்வு = மறுவாழ்வு)

புத்திரன்

மகன்