ப - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
பேரிகை | பேரிகை என்பது தகவல் தெரிவிக்கப் பயன்பட்ட ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அரசனுடைய கட்டளைச் செய்தி, திருமணச் செய்தி, ஊர்வலம் முதலிய தகவல்களை நகரில் இருப்பவர்களுக்கு அறிவிக்க இந்தக் இசைக் கருவியைப் பயன்படுத்தியிருக்கின்றனர். |
பெருடும்பு | நில முதலை என அழைக்கப்படும் பெருடும்பு உலகிலேயே அதிக எடை கொண்ட பல்லி ஆகும். இது இந்தோனேசியத் தீவுகளான கொமோடோ, புளோரெசு, ரின்கா, கிலி, மோண்டாங், படார் ஆகியவற்றில் காணப்படும். பெருடும்புகள் பல்லி இனத்திலேயே மிகப்பெரியவை; இவை உடும்பு குடும்பத்தைச் சேர்ந்தவை. |
பிரபு | பெருமையில் சிறந்தோன் |
பரிசல் | வட்ட வடிவில் உள்ள படகு. நீளமான கழியைக் (கொம்பைக்) கொண்டு நீரின் அடியே உள்ள நிலத்தை உந்தி நகர்த்தும் படகு; பெரும்பாலும் ஆற்றைக் கடக்கப் பயன்படுவது |
பறையன் | பதினெண்குடிமக்களுள் ஒருவன் |
பறைமேளம் | இது ஒரு இசைகருவி |
பரை | பூட்டியின் பூட்டி |
பார்வதி | இந்து சமயத்தினைச் சார்ந்த பெண் கடவுள். |
பங்கஜம் | தாமரை |
பங்கயம் | (சேற்றில் தோன்றுவது) தாமரை மேற்கோள்கள் |
பன் | நாணல்வகை |
பண்ணை | விளையாட்டு |
பாங்கர் | தோழர் கூட்டம் |
பிரமன் | திரிமூர்த்திகளுள் ஒருவரும் சிருஷ்டி கர்த்தருமான சதுர்முகன் (பிங்.) |
பிரம்மா | மூன்று முதன்மை இந்து கடவுளரில், ஒரு தெய்வம் ஆகும். |
பிராமணன் | பிராமண வகுப்பைச் சார்ந்தவன்; பார்ப்பனன்; அந்தணன் |
பார்ப்பனன் | பார்ப்பான் |
பார்ப்பான் | பிராமணன் |
பெருமாள் | திருமால் அல்லது பெருமாள் என்பவர் வைணவ சமயத்தின் ஸ்ரீவைஷ்ணவ மரபைப் பின்பற்றுவகள் வணங்கும் ஒரு கடவுள் ஆவார். சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய மாயோன் என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு வளர்ச்சி பெற்றது. |
பொதி | நிறைவு |