ந - வரிசை 8 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
நாள்

24 மணிகள் கொண்ட ஒரு கால அளவு,
இரண்டு சூரிய உதயங்களுக்கு இடைப்பட்ட காலம்.

நடமண்டனம்

அரிதாரம் (யாழ்.அக.)

நடலம்பண்ணு

அதிநாகரிகம் காட்டுதல். (யாழ்.அக).

நம்

நாம் என்பது வேற்றுமையுருபுகளை ஏற்கும்போது அடையும் உருவம்
எல்லாம் என்ற சொல் உயர்திணையாயின் அஃது உருபேற்கும் போது கொள்ளுஞ் சாரியை. உயர்திணை யாயி னம்மிடை வருமே (தொல். எழுத். 190) .

நமுட்டு

தினவுண்டாதல்
நிமிண்டுதல்

நித்தம்

என்றும் அழியாதுள்ள நிலை. நேரினித்தமு மொட்டின னாகுமே (மேருமந். 652).
ஓமகுண்டம். (பிங்.)
நித்தியகருமம். கருமநித்தநைமித்தங் காமியங்கள் (பிரபோத. 39, 13).
நீர்முள்ளி. (மலை.)
அனவரதமும். நித்தமணாளர் நிரம்பவழகியர் (திருவாச. 17, 3).

நித்தியம்

சாசுவதம். நித்தியமாய் நிர்மலமாய் (தாயு. பொருள்வ.1)
மோட்சம். (யாழ். அக.)
நித்தியபூசை.
நித்தியவிதி, 1.உடையவர் நித்தியம்
சமுத்திரம். (யாழ். அக.) - adv நாடோறும்

நியதம்

அடக்கம். (யாழ். அக.)
எப்பொழுதும். நியதமு மத்தாணிச் சேவகமும் (திவ். திருப்பல். 8).

நிறுத்தம்

நிறுத்துகை
(adv.) செங்குத்தாக

நெமிரல்

சோறு.(அக. நி.)

நோட்டம்

தட்டிப்பார்த்தல் முதலிய முறைகளைக்கொண்டு புரியும் நாணய சோதனை
மணிபொன் முதலியவற்றின் சோதனை
விலை. அதின் நோட்ட மறியான்.
மதிப்பு
போட்டி. நோட்டத்திலே விலை வைத்து விட்டார்கள
வெல்லமுயல்கை வார்த்தைதோட்டத்தில் என்ன பலன்

நய

விரும்புதல். பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று (குறள், 150).
சிலாகித்தல். நல்லறிவுடையோர் நயப்பது வேண்டியும் (பத்துப்பாட்டு, நச். உரைச்சிறப்.).
கௌரவித்தல்
பிரியப்படுத்துதல்.
தட்டிக்கொடுத்தல்.
கெஞ்சுதல். அவன் எவ்வளவோ நயந்து கேட்டான்.
அன்பு செய்தல். (சூடா.)
பின் செல்லுதல். (யாழ். அக.)
மகிழ்தல். வல்லைமன்ற நீ நயந்தளித்த (புறநா. 59).
இனிமையுறுதல். நஞ்சினுங் கொடிய நாட்ட மமுதினு நயந்து நோக்கி (கம்பரா. பூக்கொய். 7).
இணங்கிப் போதல். யாரிடத்தும் அவன் நயந்து போவான்.
பயன்படுதல். (யாழ். அக.)
மலிதல். இவ்வருஷத்தில் தான்யம் நயத்தது.
மேம்படுதல். அதற்கிது நயத்திருக்கிறது

நரிநாவல்

மரவகை

நரிவிரி

நரிவிரியன்
நாய்நறுவிலி

நவர்

ஆள்

நள்ளு

அடைதல். உயர்ந்தோர்தமை நள்ளி (திருவானைக். கோச்செங்.25).
நட்புக்கொள்ளுதல். உறினட்டறினொரூஉ மொப்பிலார் கேண்மை. (குறள்இ 812).
விரும்புதல். நள்ளாதிந்த நானிலம் (கம்பரா. கைகேசி 26).

நன்பு

நன்மை. நன்புளோர் வியந்தாரில்லை (திருவாலவா.16 12)
செவ்வையாய். நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் (திவ். இயற். 2,1)

நாளறுதி

காலவெல்லை
நாளடைவில்

நிண

கொழத்தல்
கட்டுதல். கட்டி னிணக்கு மிழிசினன் (புறநா. 82).
முடைதல். (சூடா.)

நித்தியப்படி

நாடோறும். நித்தியப்படிக்குத் தனித்துப் படுத்து (தனிப்பா. ii, 49, 118)
நித்தியக்கட்டளை.