ந - வரிசை 5 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
நிதர்சனம் | வெளிப்படையானது. |
நிப்பாட்டு | நிறுத்தி விடு. |
நிர்த்தாட்சண்யம் | இரக்க மற்ற தன்மை. |
நிர்ப்பந்தி | கட்டாயப் படுத்து. |
நிறைகுடம் | அடக்கமானவர் |
நிறை மாதம் | கர்ப்பவதியின் பிரசவம் சம்பவிக்கும் பத்தாம் மாதம். |
நிஜம் | உண்மை. |
நிஜார் | கால் சட்டை. |
நாட்டுக்கட்டை | உடல் வாகான கிராமத்தான். |
நக்கீரத்தனம் | யாவரையும் குற்றம் சொல்லும் தன்மை. |
நச்சரித்தல் | தொந்தரவு செய்தல். |
நச்சு நச்சு என்று | விடாமல் தொடர்ந்து. |
நடமாட்டம் | இயக்கம். |
நடைப்பிணம் | சுறுசுறுப்பில்லாதவர் |
நடையைக் கட்டு | இடத்தை விட்டு நீங்கு |
நட்டாற்றில் கைவிடு | இக் கட்டான நிலையில் வெளியேற்றி ஒருவனைப் புறக்கணித்தல். |
நப்பாசை | பயனற்ற எதிர்பார்ப்பு |
நமுட்டுச் சிரிப்பு | போலிச்சிரிப்பு |
நயினா | தந்தை. |
நஷ்டம் | இழப்பு. |