ந - வரிசை 4 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
நீதிபதி | நடுவர் |
நேசம் | நட்பு, அன்பு |
நாஷ்டா | சிற்றுண்டி |
நமஸ்காரம் | வணக்கம் |
நாகரிகம் | பண்பாடு |
நாடுகடத்தல் | நாடுகடத்து |
நவீன | புதிய |
நாயகி | தலைவி |
நொடித்துப் போதல் | சீர் குலைதல். |
நொண்டிச் சாக்கு | பொருத்த மற்ற காரணம். |
நொந்து கொள்ளுதல் | குறை பட்டுக் கொள்ளுதல். |
நொறுக்கித் தள்ளு | சிறப்பாகச் செய். |
நொறுக்குத் தீனி | அவ்வப்போது தின் பண்டம் தின்னுதல். |
நையாண்டி மேளம் | காவடி, கரகம் முதலியவற்றுக்குப் பொருத்துமாறு அடிக்கும் மேள வகை. |
நைஸ் பண்ணுதல் | ஒருவரை மகிழப் பண்ணுதல். |
நெஞ்சழுத்தம் | மன இறுக்கம். |
நெட்டுருப்பண்ணு | மனப் பாடம் செய். |
நெடுஞ்சாண் கிடையாக | உடம்பு முழுதும் தரையில் படும்படியாக. |
நெத்தியடி | செயல் இழக்கச் செய்யும் தாக்குதல் : பிறரை அவமானம் செய்தல். |
நெளிவு சுளிவு | வியாபார தந்திரம். |