ந - வரிசை 14 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
நரசிங்கன் | மனிதனும் சிங்கமும் சேர்ந்த தோற்றம் உள்ளவன் |
நாரணன் | மனிதனாய் தோற்றரவு (அவதாரம்) எடுத்த திருமால் (நரன் ஆனவன் நாரணன்); இதை வடமொழியில் நீட்டி நாராயணன் என்றும் சொல்லுவது உண்டு. |
நாரணி | நாரணனின் தங்கை |
நாரி | நாரிகை |
நாரிகை | மனிதனின் பெண்பால் (சொல் அமைப்பு பாகத மொழிகளின் அமைப்பின் படி இருக்கிறது) |
நாரதன் | இசை எழுப்புவன் (தொன்மங்களில் வரும் நாரதர் மட்டுமல்ல; சங்க இலக்கியங்களில் |
நரம்பு | வில்லில் கட்டிய, ஓசை எழுப்பும், நாண் |
நருமதை | ஓவென்று பேரிரைச்சல் போட்டுக் கொண்டு வேகமாக ஓடும் ஆறு. இதை மட்டுமே பண்டைக் காலத்தில் ஆண்யாறு என்று சொல்வதுண்டு. இதன் வேகமும், நீரின் அளவும் அவ்வளவு பெரியதாம். |
நடையன் | வயல் நிலங்களில் மாடு அல்லது எருது |
நிகழ்படம் | காணொளி |
நட்பு | தோழமை - இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவு. வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. |
நறை | தேன் |
நீளம் | நெடுமை, நீட்டம் |
நீட்டு | இன்னும் கையை நீட்டு. நீட்டினால், அத்தட்டினைப் பிடித்துவிடலாம்? |
நீட்டலளவை | நீட்டி அளக்கும் முழம், காதம் போன்ற அளவு |
நிறுத்தலளவை | ஓர் இயற்பொருளின் (Physical Quantity) நிறையை அல்லது எடையைக் கணக்கிடும் முற |
நற்சபை | நல்அவை |
நவை | குற்றம் |
நிறை | கற்பு |
நற்றமிழ் | இயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி, நடைமுறை வழக்கங்களையும் உள்வாங்கி, வெளிப்படுத்தி எளிமையாக எழுதப்படும் பேசப்படும் தமிழ்மொழியை நற்றமிழ் அல்லது நல்லதமிழ் எனலாம் |