ந - வரிசை 13 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
நாகங்கள் | அனந்தன் |
நாடி | வாதம் |
நாடிகள் | அத்தி |
நாற்பொன் | ஆடகம் |
நட்சத்திரங்கள் | அசுவினி |
நரகம் | அள்ளல் |
நவமணிகள் | மாணிக்கம் |
நவ பாடாணம் | சாதிலிங்கம் |
நிதி | கச்சப நிதி |
நூற்பயன் | அறம் |
நை | வருந்து |
நொ | நொண்டி |
நாழிகை | ஒரு நாளின் அறுபதில் ஒரு பகுதி நேரம். பண்டைத்தமிழர் இந்த நேர அளவீட்டையே கைக்கொண்டனர். இன்றைய 24 நிமிடங்களுக்குச் சமனானது.பகல் 30 நாழிகை இரவு 30 நாழிகை என்பது கணக்கீடு. |
நல்குரவு | வறுமை என்பதற்கான பழைய தமிழ்ச்சொல். இல்லாமை, ஏழ்மை என்பன ஒத்த கருத்துச் சொற்களாகும் |
நரலுதல் | ஒலி எழுப்புதல் |
நரல்வது | ஒலியெழுப்புவது. (நர நர எனப் பல்லைக் கடித்தான்) |
நரலை | ஒலி; ஒலி எழுப்பும் கடல் |
நரற்றுதல் | ஒலி எழுப்புதல் |
நருமுதல் | பல்லால் கடித்தல் |
நரன் | நரலும் குரங்கு அதாவது \'நரன்\' - மனிதன் |