ந - வரிசை 11 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
நறுமுகை | இளம் பெண் |
நீதி சாஸ்திரம் | நய நூல் |
நுண்மை | மிக மிக சிறிய |
நெய்தல் | கடலும் கடல் சார்ந்த இடம் |
நிரல் | வரிசை |
நிழற்படம் | ஒளிப்படம் |
நே | அன்பு |
நோ | நோவு வருத்தம் |
நீலம் | ஒரு நிறம், கடல், வானம், குவளைப்பூ போன்றவற்றின் நிறம் |
நவில் | கூறு |
நாற்கரம் | நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு பல்கோணம் நாற்கரம் எனப்படும். மிகவும் பொதுமைப்படுத்தப்பட்ட நாற்கோணம் நான்கு சமனற்ற பக்கங்களைக் கொண்டது. |
நன்றி | ஒருவர் செய்த உதவிக்கு அவருக்கு தம் நல்லுணர்வையும் மகிழ்ச்சியையும், கடன்பாட்டையும் தெரிவித்தல் |
நகம் | கைகளிலும் கால்களிலும் நுனியில் காணப்படும் சிறிய தடித்த பகுதி |
நில் | நிற்றல் |
நல்லா | நன்றாக |
நீங்க | நீங்கள் |
நில்லு | நில் |
நனவு | மனத்தின் விழிப்பு நிலை |
நசி | நசுங்கு |
நீராடல் | குளியல் |