ந - வரிசை 10 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
நரிவிருத்தம் | திருத்தக்கதேவரால் நரியின்கதை யொன்றைப்பற்றி இயற்றப்பட்ட ஒருநூல் |
நன்றியில் செல்வம் | உபகாரமற்ற செல்வம். (குறள், 101-ஆம் அதி.) |
நானாவிதமாய்ப்போ | பலவகையாய்ச் சிதறுண்டு போதல். (Colloq.) |
நிவம் | தோண்மேல். (நாமதீப. 583.) |
நீர்மஞ்சள் | மஞ்சள்வகை. (சீவக.3076, உரை.) |
நடப்பு | போக்கு வரவு |
நரிவாற்புல் | ஒருவகைப்புல். (யாழ்.அக.) |
நூறு | 100 |
நூறாயிரம் | 100000 |
நிகர்புதம் | 1000000000 |
நிகற்பம் | 10000000000000 |
நம்பகம் | பொறுப்புரிமை அமைப்பு |
நகை | தங்கத்தால் செய்யப்படும் அணிகலன் |
நெஞ்சழிதல் | தன்னடக்கங் கெடுதல் |
நரையான் | மீன்கொத்தி |
நல்வரவு | ஒருவர் விட்டிக்கு வரும்போது வரவேற்கும் போது கூறுவது |
நவீனத்துவம் | நவீன மயமாதலின் முழுமைக்ட்டத்தில் உருவான ஒரு கலை மற்றும் சிந்தனைப்போக்கு. நவீனமயமாதலின் எதிர்ம்றை இயல்புகளை அதிககமாகக் கவனிப்பது இது. |
நெகிழ்ச்சி | தளர்ச்சி |
நன்னன் | நற்குணங்கள் உடையவர் |
நைருதி | குபேர மூலை |