ந - வரிசை 1 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
நாயகன்

தலைவன்

நட்சத்திரம்

விண்மீன்

நட்டம்

இழப்பு

நாசி

மூக்கு

நதி

ஆறு

நவம்

ஒன்பது

நாமம்

பெயர்

நவீனம்

புதுமை; புதினம்

நாராசம்

காதுக்கு இனிமையில்லாத சொல்
அருவருப்புடைய சிறிய சந்து
கேட்க முடியாத கொடுமையான ஒலி

நிஷ்டை

தியானம்.

நிஷ்டூரம்

கொடுமை.

நிஷ்காமியம்

ஆசையற்ற தன்மை : தன்னலம் கருதாமை.

நிஷ்களங்கம்

களங்கமற்றது.

நிர்மூலம்

வேரறப்பு
முழுஅழிப்பு
அழிவு

நையாண்டி

பிறர் குறையை நகைச்சுவையாக உரைத்தல்.

நீங்கள்

முன்னிலைப் பன்மைப்பெயர். நூலவையார் போனீங்க ணோக்குமினே (சீவக.1045)

நுங்கள்

நீங்கள் என்பது வேற்றுமையுருபேற்கும்போது அடையும் உருவம். நுங்கட்கு (திவ். திருவாய். 8, 2, 1).

நாம்

தன்னுடன் இருப்பவர்களைக் குறிக்கும் சொல்,
இலக்கணம் - தன்மை நிலையில் பயன்படும்

நீம்

முன்னிலைப்பன்மைப்பெயர். நீமே வென்றிக் களிற்றானுழைச் செல்வது வேண்டு மென்றான் (சீவக.1932).

நும்

வேற்றுமையுருபிற்குமுன் நீயிர் என்ற முன்னிலைப்பன்மை கொள்ளு முருவம். நும்மெனிறுதி யியற்கை யாகும் (தொல். எழுத். 187).
எல்லீர்நும்மையும் எல்லீரும் என்ற முன்னிலைப்பெயர் வேற்றுமையுருபேற்கும்போது கொள்ளுஞ் சாரியை எல்லீரு மென்னு முன்னிலை யிறுதியும்..நும்மிடை வரூ முன் முன்னிலை