ந - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
நட்பாளர் | நட்டார், உறவோர், நசைநர், நசையுநர், கலந்தோர், உகந்தார், நண்பர், உழக்கண்ணாளர், எட்டினர், எலுவர், ஏடல்,ஒட்டுநர், ஒன்றுநர், கிளையார், கூடுநர், கேளிர், சகாக்கள்(சகா, சகி ), சகாத்தர், சகாயர், சன்னியர், துணைவர், தொக்கார், நகைவர், நயவர் ,நள்ளுநர், பசைந்தார், பாங்கர், புரிந்தோர், புல்லுநர் |
நும்பி | உம்பி - உன் தம்பி |
நீரிழிவு | இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகும். இலங்கையில் இது சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. |
நோய் | உடல் நன்றாகச் செயல்படும் தன்மையை இழத்தல் |
நோயாளி | நோய் கிருமியினால் தாக்கப் பட்டு, நோயினை உடலில் அளிக்கப் பெற்றவர், நோயாளி என்றழைக்கப் படுகிறார். |
நோயர் | நோயாளி |
நெசவாளர் | ஆடை உற்பத்தி செய்பவர்
|
நெசவாளி | நெசவாளர் |