த - வரிசை 7 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தாமரைக்கண்ணன்

திருமால்

தாமரையான்

திருமகன்

தாமன்

கதிரவன்

தாயுமானவர்

செவ்வந்தியீசர், ஒரு மெய்யறிவாளர்

தாரகன்

கண்ணன், தேர்ச்சாரதி

தாரகாரி

முருகன்

தாலகேதனன்

பலராமன், வீடுமன்

தோது

வசதி : பொருத்தம் வாய்த்தப்படி.

தோஷம்

தவிர்க்க முடியாத குறை.

தொடர்கதை

தொடர்ச்சியாக நிகழும் செயல்.

தொடை தட்டுதல்

பரபரப்புடன் செயல் புரிய ஆயத்தமாதல்.

தொடை நடுங்கி

அச்சம் உடையவன் : பயந்து நடுங்குபவன்.

தொட்டால் சிணுங்கி

எடுத்ததற்கெல்லாம் அழத் தொடங்கும் தன்மை.

தொட்டுக் கொள்ள

இட்லி முதலிய சிற்றுண்டிக்குப் பக்க உணவாகவுள்ள சட்னி முதலாவன.

தொண தொண என்று

எரிச்சல் தருமாறு திரும்பத் திரும்பப் பேசுதல்.

தொத்திக் கொள்ளுதல்

வாய்ப்பு நேரும் போது சரியாகப் பற்றிக் கொள்ளுதல்.

தொப்பைத் தள்ளுதல்

வயிறு பருத்து முன் பக்கம் சாய்தல்.

தொம்பக் கூத்தாடி

கழைக் கூத்தாடுபவன்.

தொழில் காய்ச்சல்

ஒருவனது தொழில், மேன்மை கண்டு மற்றொருவன் கொள்ளும் பொறாமை.

தொள தொள என்று

உடலுக்குச் சற்றுப் பெரிதாக உள்ள சட்டையைக் குறிப்பது.