த - வரிசை 6 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தற்பால்சேர்க்கை

ஆணும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு அடிப்படையிலான உறவு

தலை

ஒரு பொருளின் மேற்பகுதியை தலை பகுதி என்று அழைக்கப்படும்

தசபலன்

புத்தன்

தசரதன்

இராமனுடைய தந்தை, பத்துத் திக்குகளிலும் தன்னுடைய தேரைச் செலுத்தும் ஆற்றல் பெற்றிருந்தபடியால் உண்டான காரணப் பெயர்

தசாரகன்

அருகன், புத்தன்

தஞ்ஞனன்

தன்னையுணர்ந்தவன்

தட்சசங்காரன்

சிவன்

தட்சணாமூர்த்தி

அகத்தியன், சிவன்

தட்சன்

சிவன், புலவன்

தண்டதரன்

அரசன்

தண்டபாணி

முருகன்

தண்டபாலன்

துவாரபாலகன்

தண்டயாமன்

அகத்தியன், இயமன்

தண்டீசர்

சண்டேசுரர்

தமிழரசன்

தமிழ் மற்றும் தமிழரின் அரசன்

தமிழ்முனி

அகத்தியர்

தயாபரன்

கடவுள், அருளுடையவன்

தரணிதரன்

அரசன், திருமால், கடவுள்

தராதரன்

திருமால்

தராதிபன்

அரசன்