த - வரிசை 4 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
துவி

இரண்டு, துவிசக்கரவண்டி

தூய

பரிசுத்தமான.தூயமேனி (திருவாச.2, 112).

தூரிய

தூரமான. இல்லிடத்தினின்றுந் தூரிய இடத்தில் (கலித். 110, உரை).

தெட்ட

முற்றிய. தெட்டபழஞ் சிதைந்து (திவ். பெரியதி. 3,4,8).
தெளிவான. மால்கரி தெட்ட மதப்பசை கட்டின (கம்பரா. சரபங்க. 8).

தொட்ட

பெரிய

தொல்

பழைய.
இயற்கையான. தொல்லெழில் (கலித். 17, 5).

தாகாயத்து

மட்டும்.

தகாயத்து

வரை. (C.G.)

தெம்பு

வலிமை
ஆற்றல்.

தூக்கனாங்குருவி

baya weaver

தொழிலர்

பூவைசியர்

தகனம்

எரியூட்டல்

தண்டனை

ஒறுப்பு

தருணம்

வேளை

தருமம்

அறம்
கடமை

தலா

தலைக்கு

தாக்கல்

ஒப்படைப்பு

தாட்சண்யம்

கண்ணோட்டம்,இரக்கம்

திரவியம்

செல்வம்

திரவியம்

ஏலம்
லவங்கம்
அதிமதுரம்
கோஷ்டம்
சண்பகமொட்டு