த - வரிசை 3 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தகிடிக்கை

கோபம் வியப்பு முதலியவற்றின் குறிப்புச்சொல்.

தடம்பொங்கத்தம்பொங்கோ

பொங்கத்தம் பொங்கோ. (திவ்.பெரியதி.10, 1.)

தம்மாகும்மா

மகிழ்ச்சிக் குறிப்பு. ஆட்டுக்கறியும் நெல்லுச்சோறுந் தம்மாகும்மா.

தத்

அதட்டற்குறிப்பு.
அந்த. தத்திருப்பதி (திருப்பு.124)
அது. தத்தொமசி (வேதா.சூ.117)

ததாஸ்து

'அங்ஙனமே ஆகுக' எனப் பொருள்படும் ஒரு வடமொழி வாழ்த்துத்தொடர்.

தூ

இகழ்ச்சிக் குறிப்பு குறிப்பு. தூ! நீ யொரு மனிதனா௯

தூ

தூய்மை
வெண்மை
வலிமை

தோலோதோல்

உடம்படாமைக் குறிப்பு (பஞ்சதந்.)
எவ்விதமும்.

தட

பெரியதாடோய் தடக்கை (புறநா. 14, 11).
வளைந்த. தடங்கோட்டெருமை (ஐங்குறு. 98).

தகீத்து

சரியான
தௌளிவான

திகர்

வேறு. திகர் ஜில்லா

திகிரி

See திகர். (C. G.)

தெற்கத்தி

தெற்கிலுள்ள தெற்கத்திப்பேச்சுல்.

தெற்கித்தி

See தெற்கத்தி.

தெற்குத்தி

See தெற்கத்தி.

தசார்

தயார். (யாழ்.அக.)

திவ்விய

இனிய. தேன்றரு மாரிபோன்று திவ்விய கிளவி தம்மால் (சீவக. 581).

தீய

தீமையான.
போலியான. தீயபக்கமுந் தீயவேதுவும் (மணி. 29, 143).

தீவிய

இனிமையான. செவ்விய தீவிய சொல்லி (கலித்.19).

துய்ய

கலப்பற்ற. துய்யவெள்ளை.
பரிசுத்தமான. துய்யதேவர் (கம்பரா. பிரமாத்திர. 189).
நிச்சயமான. துய்ய பொருளீதென் றுந்தீபற (திருவுந்தி. 10).