த - வரிசை 26 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தரவு

தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
தரவு=கலிப்பாவில் முதல் உறுப்பாக விளங்குவது தரவாகும்.மூன்றடி சிற்றெல்லையும் வரையறையற்ற பேரெல்லையும் கொண்டது.எனினும் 12 அடிகளே மிகுதியாகக் காணப்படுகிறது.
எருத்தம் என்பது இதன் வேறு பெயர்

தாதை

தந்தை
பாட்டன்
படைக்கும் கடவுள் = பிரமன்;

தமிழகம்

தமிழ்நாடு
இந்தியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம்.

தண்ணுமை

பண்டைத் தமிழ் நாட்டில் தண்ணுமை மிகச் சிறந்த தாளவிசைக் கருவியாக விளங்கியுள்ளது. தண்ணுமை இனிய குரலையுடையது. அமைப் போர்க்களத்தில் முழங்கியுள்ளனர். அந்த இசை முழக்கத்தைக் கேட்டுப் போர் வீரர்கள் வீறுகொண்டு வெற்றி வேட்கையுடன் போராடியுள்ளனர் சங்கப் பாடல்கள் தரும் விளக்கங்கள் தண்ணுமையிலிருந்து இன்றைய தாளவிசைக் கருவியான மிருதங்கம் சற்று சீர்திருத்திய அமைப்பில் உருவாகி இருக்க வேண்டும்.

தவில்

நாதசுரத்துக்குத் துணையாக வாசிக்கும் தென்னிந்திய தாள வாத்தியம்
ஒரு புறம் குச்சி கொண்டும், மறுபுறம் விரல்கள் கொண்டும் வாசிக்கப்படும்

துடி

துடி என்பது பொருள்களின் மிகச்சிறிய அலகு ஆகும்
தமிழில் இதற்கு இணையான வேறு சொல் மூலக்கூறு
இருபுறமும் தோல் கொண்ட வாத்தியம். உடுக்கைப்போன்று இருக்கும், ஆனால் இது சற்றே உடுக்கையை விட நீளமாக இருக்கும். எனவே இரு கரங்கள் கொண்டு வாசிக்க வேண்டிருக்கும்.

தூம்பு

துளை; துவாரம்
தூம்பு என்பது மூங்கிலை அறுத்து குழல் போன்று செய்யப்பட்ட கருவியாகும். இதனை வாங்கியம் என்றும் நெடுவாங்கியம் என்றும் கூறியுள்ளனர். இது யானையின் துதிக்கையைப் போன்றது.

தமுக்கு

தமுக்கு என்பது தகவல் தெரிவிக்க உதவும் ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் அரசாங்கம், நீதிமன்றம், கோயில்கள் போன்றவற்றின் அறிவிப்புகளை வெளியிடும் முன்பு அடிக்கும் ஒரு இசைக்கருவியாக இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தவண்டை

தவண்டை என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். உடுக்கை ரூபத்தில் உள்ள பெரிய தாளக் கருவியே தவண்டை ஆகும்.

தாரை

தாரை எனப்படுவது 12 அடி வரையான நீளத்தைக் கொண்ட ஒரு பழந்தமிழ் ஊதுகருவி. பல்வேறு சடங்குகளில் இக் கருவி பயன்படுகிறது. இக் கருவி சீரான, இடை நிற்காத இசை தருவது

திமிலை

திமிலை என்பது தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். இது மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவியாகும். இது பாணி எனவும் அழைக்கப்படுகிறது.

தாசி

விபச்சாரி

தோணி

நீரில் மிதந்து செல்லக்கூடிய மரங்களால் அமைக்கபட்ட தோணி.

தரவாடு

மருமக்கட்டாயக் குடும்பம்
கேரளத்தின் சாதியை அடிப்படையாகக் கொண்டு வீடுகளின் பெயர்களை மனிதருக்கு இணைக்கும் பெயர்.

தப்பட்டை

தோளில் மாட்டிக்கொண்டு குச்சியால் அடித்து ஒலி எழுப்பும், வட்டமான ஒரு வகைத் தோல் வகை இசை கருவி

திருமால்

பெருமாள்

தமிழி

தமிழி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்பட்ட ஒலிப்பியல் எழுத்து முறைமை. தமிழ்ப் பிராமி என்றும் அழைக்க படும்.

தம்பதி

இணையர், மணவினையர்

தம்முன்

தனக்கு முன் பிறந்தவர்

தங்கச்சி

தங்கை