த - வரிசை 25 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தூங்கை

நித்திரை செய்தல்
உறக்கம்

தேவலை

ஏற்கத் தகுந்தது:ஏற்கத் தகுந்தவர்
ஓரளவுக்கு உதவக் கூடியது
சீர் அடைந்த நிலை

தொன்னை

வாழை இலையையோ வேறு இலைகளையோ சுருட்டி தைத்துச் செய்யப்பட்ட சிறு கிண்ணம் போன்ற சாதனம்

தடுமாறு

நிதானமின்மை

துய்ப்பு

அனுபவித்தல், அல்லது மூழ்கிக் களித்தல் எனப் பொருள்தரும் சொல்.

தீபகற்பம்

மூன்று பக்கம் கடலால் சூழப்பட ஒரு சிறிய நிலப்பரப்பு

திருக்கோணமலை

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் உலகப் புகழ் பெற்ற இயற்கைத் துறைமுக நகரம். தமிழர் தாயகத்தின் தலை நகரம் எனக் கொண்டாடப் படுவதனால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நக‌ராகவும் உள்ளது. புகழ்பெற்ற கோணேசர் ஆலயமும் கன்னியா வெ ந் நீரூற்றும் இதன் மேலதிகச் சிறப்புகள். குண (கிழக்கு) திசையில் அமைந்த மலைகளோடு கூடிய நகர் என்ற பொருளில் திரு(சிறப்புடைய) +குணமலை என்பது திருக்கோணமலை ஆகியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.மூன்று கோணங்களில் அமைந்த மலை என்ற கருத்தில் திரிகோணமலை எனவும் அழைப்பர்.திருமலை என்ற சொல்லும் தற்போது வழக்கத்தில் உண்டு.

தோடு

பெண்கள் காதில் அணியும் அணிகலன்.
(பனை முதலானவற்றின்) ஓலை; காதில் அணியும் ஓலைச்சுருள், வளையம்
பழக் கொட்டையின் கெட்டியான மேல் ஓடு
கூட்டம் (கீழே விளக்கம் பார்க்கவும்)
பூவிதழ்
அணை

தமிழர்

தமிழ் மொழியினை, தாய்மொழியாகக் கொண்டவர்கள்.
தமிழ் பாரம்பரியம் உடையவர்கள்.

தென்றல்

தென்காற்று

தென்காற்று

தெற்க்கு திக்கில் இருந்து வீசும் காற்று; தென்றற் காற்று, உடம்புக்கு ஆரோக்கியம் தரும்; சித்திரை வைகாசி மாதங்களில் வீசும்

துழாய்மாலையான்

பெருமாள்

தனித்தமிழ்

பிறமொழி சொற்களின் கலப்படமின்றி மரபுசார் இலக்கண நெறிகளுக்கு இறுக்கமாக ஒழுங்கி எழுதப்படும் பேசப்படும் தமிழ்

தீபாவளி

தீப (என்னும் வடசொல்லும்) + ஆவளி = தீபங்களின் வரிசை என பொருள்படும்.

தளவமைப்பு

தளக்கோலம்

துமி

வெட்டு
மழைத்துளி
தூறல்
நீர்த்துளி

தொடலி

தொடரி
தொடுகோடு

துறை

ஒரு பாடத்தின் உட்பிரிவு.
எடுத்துக்காட்டாக, உயிரியல் என்ற பாடத்தின் உட்பிரிவாக தாவரவியல் மற்றும் விலங்கியல் போன்ற பிரிவுகளைச் சொல்லலாம்.
ஒத்திருத்தல் - ஒரு திட்டம் வெற்றிஅடைய அனைவரது கருத்தும் ஒத்திருக்க வேண்டும்.
சமயத்துறை, ஆங்கிலத்துறைத்தலைவர்( head of English department).
கரையோரத்தில் நிற்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு.

தாவரம்

மரம், செடி, கொடி போன்றவற்றை உள்ளடக்கிய உயிரினவகை, நிலைத்திணை.
அவ்வகைப்பாட்டுள் அடங்கும் ஒரு தனிப்பட்ட உறுப்பு.

தாய்மொழி

ஒருவருடைய முதல் மொழி,
ஒருவருடைய தாயின் அல்லது தந்தையின் மொழி,
குழந்தையாக இருக்கும் போதிருந்து, முதன் முதலாக புரிந்து\அறிந்து கொள்ளும் மொழி.