த - வரிசை 20 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
தச்சன் | மரத்தில் வேலை செய்பவன் |
தச்சன்குருவி | மரங்கொத்தி |
தலையிலாக்குருவி | தரையில் தங்காது பெரும்பாலும் பறந்துகொண்டே இருக்குங் குருவிவகை |
தரையில்லாக்குருவி | தலையிலாக்குருவி |
தைலாங்குருவி | தலையிலாக்குருவி |
தகைவிலாங்குருவி | தலையிலாக்குருவி |
தூக்கணங்குருவி | தூக்கணம் + குருவி. தொங்குங்கூடு கட்டுங் குருவிவகை |
தூக்கணம் | தூக்கு |
தூதுணம் | தூக்கணங்குருவி |
தணிக்கை | திரைப்படம் முதலியன ஒழுக்கவிதிகள், கட்டுப்பாடுகளுக்குட்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து அவற்றை மீறும் பகுதிகளை நீக்கிச் சான்றிதழ் வழங்கல் |
தனயன் | மகன் |
தீர்ப்பு | தீர்மானம் |
தட்டம் | உணவு உண்ணும் தட்டு; உண்கலம் |
தனவந்தர் | செல்வத்தை உடையவர் |
தமையன் | அண்ணா |
துவக்கம் | ஆதி |
தானியம் | உழுந்து |
திறம்பட | சரியாகவும் ஒழுங்காகவும் ஒரு வேலையை செய்தலை கூறுதல் |
தொன்மம் | பழைய வரலாற்று பதிவுகள் |
தரும சாஸ்திரம் | அறத்து பால் |