த - வரிசை 18 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
தில்ல | தில். தீயேன் றில்ல மலைகிழவோற்கே (ஐங்குறு. 204). |
து | சுட்டுப்பெயர் வினாப்பெயர்களில் ஒன்றன்பால் குறிக்கும் விகுதி |
தெய்ய | தெய்யோ. சொல்லினித் தெய்ய யாந்தெளியுமாறே (அகநா.220). |
தெய்யோ | ஓர் அசைநிலை. வாரா யாயின் வாழேந் தெய்யோ (ஐங்குறு.239). |
தொட்டு | குறித்து. அவனைத் தொட்டு எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை |
தொறு | தான்புணர்ந்த மொழியின் பொருண்மையினைப் பலவாக்கி அடுத்தடுத்து ஆங்காங்கு என்பன பட நிற்கும் ஓரிடைச் சொல். நவிறொறும் நூனயம் போலும் (குறள், 783). (நன். 420, மயிலை.) |
தோ | நாயைக் கூப்பிடும் ஒலி |
தரவை | கரம்புநிலம் |
தவு | குன்றுதல். எஞ்ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து (குறள், 361) |
திருட்டி | கண்ணுக்குப் புலனாதல். திருட்டித்த வாலமன் மதனொரு பாலிருக்க (சீதக்.118). |
துவரன் | துவரம் |
துறவி | துறுவு |
தொடரல் | கடல். (அக.நி.) |
தொல்லை | துன்பம், மனத்தொல்லை யொழிவது என்று |
தக்கப்பண்ணு | ஒருவனது தகுதியைக் காட்டுதல். ஒருவேலையிற் றலையிட்டால் அதற்குத் தக்கப்பண்ணவேண்டாமா. (Loc.) |
துக்கிதன் | துயரமுடையோன். தலைவலியரியுந்துக்கிதன் (சிவதரு. சனன. 48) |
துக்கு | கீழ்மை |
தொடங்கி | ஆதிமுதல். தொடங்கிப் பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை (நாலடி, 173) |
தாளமானம் | தாளவளவு. இனித் தாளமானத் திடையே நின்றொலிக்கும் (மலை பது, 9, உரை) |
திமிர் | பூசுதல். சாந்தந்திமிர்வோர்(மணி. 19, 86) |