த - வரிசை 17 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
தொம்மெனல் | ஒலிக்குறிப்பு. தொம்மென . . . குடமுழவெழு முழக்கம் (கோயிற்பு. நடராச. 7). |
தீவினை | தீவினைப்பயன்(தீவினை). பகைபாவ மச்சம் பழி (குறள், 146). |
துவர்நீர் | துவர்ப்புத்திராவகம் |
துறந்தோர் | துறந்தார். துறந்தோர் தம்முன் றுறவி யெய்தவும் (சிவப், 27, 95) |
தினப்படி | தினந்தோறும் |
தெரிபொருள் | (அறிபவன்) ஆன்மா தெரிபொரு டேரின் (பரிபா2, 26) . |
தலைத்தலை | தண்டாரகலந் தலைத் தலைக் கொளவே (ஜங்குறு. 33.) |
தலைத்தாள் | [அடிமுன்பு] பெரியவ-ன-ள். சாவக மாளுந் தலைத்தாள் வேந்தன் (மணி, 14, 103) |
தவிர | நீங்க. அது ஒன்றுதவிர எல்லாம் உண்டு.- Conj. ஒழிய. நீ வந்தால்தவிர நடவாது. |
தாலி | கணவன் மணந்ததற்கு அடையாளமாக மனைவியின் கழுத்தில் கட்டும் அடையாள உரு |
துத்தாத்தி | பாற்கடல். (யாழ்.அக.) |
துலத்தாது | நிலப்பனை. (சங்.அக.) |
துலையோடு | தண்ணீரிறைப்பதற்குத் துலாமரத்திலேறி மிதித்தல். |
தம் | பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை. தம்மிடை வரூஉம் படர்க்கை மேன (தொல்.எழுத்.191). |
தமம் | மேம்பட்டது என்னும் பொருளில்வரும் வடமொழி விகுதி. மந்ததமம். |
தோறும் | ஒவ்வொன்றும், ஒவ்வொருபொழுதும் என்ற பொருளில் வரும் இடைச்சொல். காண்டோறும் பேசுந்தோறும் (திருவாச, 10, 3). |
தார் | உடைமையைக் குறிக்கும் ஒரு சொல் |
தாரி | தரிப்பவன் என்னும் பொருள்படும் விகுதிவகை |
தீ | நெருப்பு |
தில் | விழைவு, காலம், ஒழியிசை என்னும் பொருள்களில் வரும் ஓரிடைச்சொல். (தொல். சொல். 255.) |