த - வரிசை 16 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
தெசாகம் | தசாகம். (சங்க்.அக.) |
தோற்குல்லாய் | தோலாற்செய்த குல்லாவகை |
தூண்டுசொல் | விளங்காத தெளிவில்லாத பேச்சு |
தாவணம் | விலங்குகளுக்கு கழுத்திற்குங்காலுக்கும் இடும் பூட்டுங்கயிறு |
திரும்பு | திருப்பு |
தந்தை | பண்டைத் தமிழில் பெற்றவனைக் குறிக்கும் படர்க்கைச் சொல். இன்று மூவிடத்துக்கும் பொருந்தும். முந்தையத் தமிழில் எனது தந்தை எந்தை என்றும் எதிர் நிற்பவரின் தந்தை நுந்தை என்றும் சூட்டப்பட்டன |
தணல் | தழல் |
தம்பட்டம் | தம்பட்டம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். |
தாழ்வாய் | தாழ்வாய்க்கட்டை |
தும்பு | நார் |
தோற்பறை | தோப்பறா |
தமரம் | அரக்கு |
தபாற்காரன் | அஞ்சற்காரன் |
தரம் | தகுதி. தந்தரத்திற்கு ஏற்ப (சீவக. 112, உரை). |
தற்சமயம் | குறித்தவேளை. (W.) |
தாம் | அவர்கள். தாம் சொன்னதைத் தாபித்தனர். |
திரவிணம் | பொன் |
திருமுன் | திருமுன்பு. விழுந்தவர் திருமுன்சென்று (திருவாலவா. 27, 28) |
திருமுன்பு | திருமுன்னர் |
தேயம் | தியானிக்கத்தகுந்தது. அறிவோர் தேயமாவது யார்க்குமெட்டாதது (கந்தபு. அவைபுகு.126). |