த - வரிசை 15 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தாழம்பூ

கேதகை
தாழை

திரு

கணவன்

திருமதி

கணவனை மதிப்பவர்களை திருமதி என்று பொருள்

தங்கை

தங்கச்சி
இளையவள்
இளையோள்
பின்னை
பிற்பிறந்தாள்

தம்பி

இளைய சகோதரன்
இளையவன்
இளையோன்
பின்னனோன்
பிற்பிறந்தான்
இளவல்
தம் + பின் → தம்பி

தரித்திரன்

வறிஞன்
உலுத்தன்

தொம்பக்கூத்தாடி

கழைக் கூத்தாடுபவன்

தொம்பை

மூங்கிலால் செய்யப்பட்ட குதிர் போன்ற கூடை

தொள தொள

தொள தொள என்று உடலுக்குச் சற்றுப் பெரிதாக உள்ள சட்டையைக் குறிப்பது

தொண தொண

தொண தொண என்று எரிச்சல் தருமாறு திரும்பத் திரும்பப் பேசுதல்

தோட்டி வேலை

கோள் சொல்லுதல்

தோரணை

வகிக்கும் பதிவிக் கேற்றப்படி நடக்கும் பாவனை

திரட்சி

கூடிய தன்மை

தோழன்

நண்பன்

தட்டு

தகடு

தளர்ச்சி

தளர்ந்து போதல்
தொய்வு
இளக்கம்
நெகிழ்ச்சி
சோர்வு
ஓய்ச்சல்

தக்கணம்

உடனே

தகு

ஏற்றதாதல். கற்றபி னிற்க வதற்குத் தக (குறள்.391).
மேம்படுதல். பெண்ணிற் பெருந்தக்கயாவுள (குறள்.54).
தொடங்குதல். புல்லாள் புலத்தக்கனள் (குறள்.1316).
கிட்டுதல். துன்புறினல்லது சுகந்தகாது (திருவானைக்.நாட்டு.115)
தகுதியாதல். இந்தப் பெருமை அவனுக்குத் தகாது. ஒத்தல். புண்டரிகந்தகுபத யுகளம் (கோயிற்பு. பதஞ்சலி. 40).
பறைப்பொது. (சூடா).

தாங்கா

ஒருவகைக் குதிரைவண்டி

துக்கடி

நிலப்பகுதி