த - வரிசை 13 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தழுதழுத்த

உணர்ச்சியால் துக்கம் மேலிட்டு உச்சரிக்கும் குரல் குழைவது.

தள்ளாத காலம்

முதுமையுடைய பருவம்.

தள்ளிப் போடு

செயலைப் பின்னர் செய்யலாம் என்று ஒத்திப் போடு.

தனிக்குடித்தனம்

திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் தனி வீட்டில் நடத்தும் குடும்பம்.

தன்னந்தனியாக

தான் ஒருவன் மட்டும் : திருமணம் செய்து கொள்ளாத தன்மை.

தஸ்தாவேஜு

ஆணவம் : பத்திரம் முதலியன.

திகுதிகு என்று

கடுமையான வலியோடு வருந்தும் குறிப்பு.

திக்கித் திணறு

திக்கு முக்காடு : சிக்கலில் தவி.

திக்பிரமை

திகைப்பு : சுய உணர்வில்லாமை.

திடீர் என்று

எதிர் பாராத : முன்னறிவிப்பின்றி .

திடுதிடு என்று

வேகமாக
எதிர் பாராது

திட்ட வட்டம்

உறுதியான : தெளிவான.

திட்டி வாசல்

கோயில் வெளிக் கதவினுள் பொருத்தப்படும் சிறு கதவு.

திமிலோகப் படுதல்

பரபரப்பு அடைதல்.

திமுதிமு என்று

கூட்டமாகச் சேர்ந்து ஓசையுடன் ஓடும் தன்மை.

திரிசமன்

கையாடுதல் : தகாத செயல்.

திருக்கண்ணமுது

பாயசம்.

திருகு தாளம்

புரட்டுச் செயல் : மாறுபட்ட பேச்சு.

திரு திரு என்று

அச்சத்தை வெளிப்படுத்தும் தன்மையில் விழித்தல்.

திருப்பு முனை

வாழ்க்கையின் பாதையை மாற்றும் கட்டம்.