த - வரிசை 12 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தப்புக் கணக்குப் போடு

உண்மைக்கு மாறாக மதிப்பிடு.

தப்புத் தண்டா

முறையற்ற செயல்.

தமாஷ்

நகைச்சுவை பேசுதல்.

தம்பட்டம் அடி

பலர் அறியுமாறு கூறு.

தர்ம அடி

குற்றம் புரிந்தவர் பலரால் படும் அடி உதை.

தலைக்கனம்

செருக்கு.

தலை காட்டு

தோன்று : வெளிப்படு.

தலைக் குனிவு

அவமானம்.

தலை தீபாவளி

திருமணமான பின் கொண்டாடும் முதல் தீபாவளி.

தலை தூக்கு

மேல் நிலைக்கு எழுதல்.

தலை தெறிக்க

வேகமாக.

தலை நிமிர்தல்

பெருமை கொள்ளுதல்.

தலைப்படு

முற்படு.

தலைமறைவு

பதுங்கியிருத்தல்.

தலை மாடு

படுக்கை நிலையில் தலையிருக்கும் பக்கம்.

தலையணை மந்திரம்

மனைவி கணவனுக்குப் படுக்கையறையில் பேசும் பேச்சு.

தலையாட்டிப் பொம்மை

சுய சிந்தனையின்றிப் பிறர் சொல்வதற்கெல்லாம் சரி என்று கூறுபவன்.

தலையை வாங்கு

தொந்தரவு செய்.

தவசிப்பிள்ளை

சமையல் செய்பவர்.

தவிடு பொடியாக்கு

ஒன்று மில்லாமல் செய்.