த - வரிசை 11 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தாஜா பண்ணுதல்

ஒருவரை மகிழ்வித்தல்.

தகதக என்று

அடுப்புத் தீ எரிதலைக் குறித்தது.

தகாத

முறையற்ற.

தகிடு தத்தம்

தவறான வழி முறையைப் பின்பற்றுதல்.

தங்கக் கம்பி

மிகவும் நல்லவன்.

தங்கமான

மாசுமறுவற்ற.

தங்கு தடை

தடுமாற்றம்.

தடம் புளுதல்

பாதை மாறுதல்.

தடியன்

பயனற்றவன்.

தடுமாற்றம்

நிலை தவறுதல்.

தட்டிக்கழி

காரணம் ஏதேனும் காட்டி ஒதுக்கு.

தட்டிக்கொடு

ஊக்கப்படுத்து.

தட்டிச் செல்

வெற்றி பெற்றுப் பெருமை கொள்.

தட்டிச் சொல்

மறுத்துக் கூறு.

தட்டிப் பறி

கவர்ந்து கொள்.

தட்டுத் தடுமாறுதல்

இயல்பாகச் செய்ய முடியாமல் வருத்தம் கொள்ளல்.

தட்டுப் படுதல்

புலனுக்குத் தெரிதல்.

தட்டுப்பாடு

போதிய அளவு பொருள் கிடைக்காது பற்றாக் குறை யுண்டாதல்.

தண்ணீர் காட்டு

அலைக்கழித்து ஏமாற்று.

தண்ணீர் தெளித்து

விடு: ஒருவரை அவர் விருப்பம் போல் நடக்குமாறு விட்டுவிடு.