த - வரிசை 10 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
தாகசாந்தி | இளநீர் : மோர் பானங்கள். |
தாக்கல் செய் | ஒப்படை : பதிவு செய். |
தாக்குப் பிடி | பொறுமையோடு ஈடு கொடுத்துச் சமாளி. |
தாசில் பண்ணு | அதிகாரம் செலுத்து. |
தாட்டு பூட்டு என்று | அதிகாரம் காட்டும் வகையில் உரக்க கத்துதல். |
தாத்பரியம் | கொள்கை : பொருள். |
தாம்பத்தியம் | குடும்ப வாழ்க்கை. |
தாம்பூலம் மாற்று | திருமணம் நிச்சயம் செய். |
தாயத்து | மந்திரித்த தகட்டை அடைத்துத் தரும் உலோகக் குப்பி. |
தாயம் விழவில்லை | கைகூட வில்லை. |
தாய்ப்பத்திரம் | சொத்துரிமை குறித்த முதல் பத்திரம். |
தாய் மாமன் | தாயின் சகோதரர். |
தாரக மந்திரம் | உயிர் மூச்சாகக் கொள்வது. |
தாராளமாக | மிகையாக : அதிகமாக. |
தாரைவார் | கைவிட்டுப் போக விடு. |
தாலியறுத்தல் | விதவையாதல் : கைம் பெண்ணாதல். |
தாவா | பிரச்சினை : வழக்கு : தகராறு. |
தாளம் போடு | பிறர்க்கு ஒத்துப் போ : துன்பப் படு. |
தாறுமாறாக | ஒழுங்கற்ற நிலையில். |
தான் தோன்றித்தனம் | கட்டுப் பாடின்றி தன்னிச்சையாக : ஒழுங்கு முறையில்லாது. |