ஞ - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஞமலி | நாய், கள், மயில் |
ஞாலம் | உலகம் |
ஞானம் | அறிவு |
ஞாபகம் | நினைவு |
ஞானபரன் | கடவுள், ஞானகுரு |
ஞானானந்தன் | கடவுள் |
ஞானி | அருகன் |
ஞானன் | கடவுள், நான்முகன் |
ஞான வேள்வி | ஓதுதல் |
ஞான வகை | கேட்டல் |
ஞான போதனை | சமய தீட்சை |
ஞாபகி | நினைவாற்றலுள்ளவன் |