ச - வரிசை 9 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
சின்னஞ்சிறியா | மிகச்சிறிய. சின்னஞ்சிறிய மருங்கினிற்சாத்திய செய்யபட்டும் (அபிரா. 53). |
சின்னஞ்சிறு | See சின்னஞ்சிறிய. |
சீரிய | சிறப்பான. சீரிய சிங்காதனத் திருந்து (திவ்.திருப்பா.23) |
சுதா | தன்னடைவான. சுதாசாட்சி. |
சுவ | தன்னுடைய. சுவபட்சம். |
செய்ய | சிவந்த. செய்ய தாமரைகளெல்லாம் (கம்பரா. நீர்விளை. 3). |
செவ்விய | நேர்மையான. செவ்விய தீவிய சொல்லி. (கலித்.19). |
சர்வ | எல்லாம். |
சேவை | எதிராக. கடைக்குச்சேவை. |
சிவதா | அபயக்கூற்று. (பெரியபு. ஏறி.16) |
சூனா வயிறு | பெருத்த வயிறு. |
சூனியக்காரி | சூனிய வித்தை செய்பவள். |
செஞ்சோற்றுக் கடன் | நன்றி மறவாமை |
செத்துப் பிழைத்தல் | ஆபத்திலிருந்து மீளுதல். |
செப்படிவித்தை | ஒரு பொருளைத் தோன்றவும் மறையவும் செய்யும் தந்திர வித்தை. |
செமத்தியாக | மிகவும் பலமாக |
செலவு வை | செலவழிக்கச் செய் |
செல்லரித்துப்போன | மதிப்பிழந்த,சீர் கெட்ட |
செல்லாக் காசு | பயனற்றது, மதிப்பிழந்தது |
செவ்வாய் தோஷம் | ஜாதகருக்கு லக்கினத்திலிருந்து 7 அல்லது 8 முதலான இடத்தில் செவ்வாய் இருப்பதால் கூறப்படும் குறை. |