ச - வரிசை 7 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
சைனியம் | போர்ப்படை சார்ந்தவர் குழுமம். |
சித்திரை | மேழம் (31 ) (14 Apr) |
சர்க்கஸ் | வட்டரங்கு விளையாட்டு |
சுவிஸ் | சொடுக்கி |
சோபா செட்டு | மெத்திருக்கை |
சேவார்த்தி | கோவிலில் இறைவனை வழிபட வரும் பக்தர்கள். |
சேர்ந்தாற் போல் | தொடர்ச்சியாக,கும்பலாக. |
சோத்தம் | இழிந்தார் செய்யும் அஞ்சலி. சோத்தம் நம்பியென்று தொண்டர்..அழைக்கும் (திவ்.பெரியதி.2, 2, 6) . |
சபர் | பொறுத்தற் குறிப்பு |
சபாசு | See சபாஷ். சபாசென்று மெச்சிக் கொடுக்கு மதிகாரமே (திருவேங். சத. 41). |
சாபாஷ் | 'மிகநன்று' என்னும் குறிப்பு. |
சத்து | அமைதியாயிருக்க வழங்குங் குறிப்புச்சொல் (கோயிலொ.) |
சயசய | வெற்றிகுறித்த வாழ்த்துமொழி. சயசய போற்றி போற்றி (திருவாச. 5, 62). |
சவ்வாசு | See சபாஷ். |
சவாசு | See சபாஷ். |
சிச்சி | See சிச்சி. |
சிச்சீ | இகழ்ச்சிக் குறிப்பு. சிச்சீ வயிறு வளர்க்கைக்கு மானமழியாது (நல்வழி.14). |
சிவசிவ | ஓர் இரக்கக்குறிப்பு. சிவ சிவ மற்றென் செய்வாய் (அருட்பா, நெஞ்சறி.401). |
சீ | இகழ்ச்சி வெறுப்புக்களின் குறிப்பு. |
சீச்சீ | இகழ்ச்சிக் குறிப்பு. (பிங்.) |