ச - வரிசை 6 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
சமாளி | ஈடுகொடு |
சமத்காரம் | சாதுரியம். |
சபலம் | சிறுமையுடைய ஆசை. |
சந்தேகம் | அய்யம் |
சந்தா | உறுப்பினர் பதிவுக்குச் செலுத்தும் தொகை. |
சதா | எப்போதும். |
சந்தடி | நடமாட்டம் : இரைச்சல். |
சடுகுடு | கபடி விளையாட்டு. |
சஞ்சிகை | வார, மாத இதழ். |
சஞ்சாரம் | நடமாட்டம் |
சச்சரவு | சண்டை |
சங்கேதம் | ஒரு சிலருக்கு மட்டும் புரியுமாறு கூறும் இரகசியமான குறிப்புச் சொல். |
சங்கிரகம் | சுருக்கமாக எழுதப்பட்டது. |
சங்கடம் | தயக்க நிலை |
சங்கதி | சம்பவம் |
சக்களத்தி | முதல் மனைவி இருக்கும் போது கணவன் திருமணம் செய்து கொண்ட மற்றொரு பெண். |
சகிதம் | துணை |
சகாயம் | உதவி. |
சகவாசம் | பழக்கம், நட்பு |
சகலபாடி | மனைவியின் சகோதரி கணவன். |