ச - வரிசை 5 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
சிறுக்கி | கீழ்த்தரமானவள். |
சிலாக்கியம் | நல்லது : மேன்மை உடையது. |
சிரமம் | கடுமை |
சிரத்தை | ஒரு மூலிகை வகை |
சிபாரிசு | பரிந்துரை. |
சிதிலம் | சிதைவு : இடிந்த நிலை. |
சிகிச்சை | மருத்துவம் |
சாஷ்டாங்க நமஸ்காரம் | தரையில் எட்டு அங்கம் பதியுமாறு வணங்குதல். |
சாமானியம் | சாதாரணம். |
சாகசம் | துணிச்சல் |
சஷ்டி | ஆறாத்திதி |
சள்ளை | தொல்லை. |
சவடால் | ஆரவாரப் பேச்சு. |
சவால் | அறைகூவல். |
சல்லா | மிக மெல்லிய. |
சலாம் | வணக்க முறை. |
சரசம் | இனிய குணம். யாரோடும் சரசமாயிருப்பவன் |
சம்மன் | குறிப்பிட்ட நாளில் வருமாறு கூறும் உத்தரவு. |
சம்பிரதாயம் | தொன்மரபு |
சம்சயம் | சந்தேகம் : ஐயம். |