ச - வரிசை 33 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
செல்வப் பேறுகள் | தனம் |
சூரியனின் குதிரைகள் | காயத்திரி |
சிவ தத்தவம் | சுத்த வித்தை |
சிவபுராணங்கள் | சைவ புராணம் |
சூரிய புராணம் | பிரம கைவர்த்த புராணம் |
சிங்கை | சிங்கப்பூர் குடியரசு |
சங்காத்தம் | உறவு, நட்பு எனப் பொருள்படும். அதேவேளை சங்காத்தன் என்பது நண்பன் என்றும் சங்காத்தி என்பது நண்பி என்றும் பொருள்தரும்.இந்த நல்ல இலக்கியச்சொல் யாழ்ப்பாண மக்களின் பேச்சு வழக்கில் இன்றும் பரவலாகக் காணப்படுகிறது. |
சுணங்கன் | பண்டைய இலக்கியங்களில் இச்சொல் காணப்படுகிறது. நாய் என்பது இதன் கருத்து. நாயை ஞமலி, குக்கல் என்ற பதங்களாலும் அழைப்பர். |
சிராய் | மரச் சக்கை : சிறாம்பு |
சிற்றன்னை | தாயின் இளைய சகோதரிகள், தந்தையின் பிந்திய தாரம், தந்தையின் இளைய சகோதரர்களின் மனைவிமார்,தந்தையின் இளைய மைத்துனிமார், தாயின் இளைய மைத்துனர்களுடைய மனைவிமார் ஆகியோரைக் குறிக்கும் உறவுச் சொல். சிற்றனையின் துணைவர் சிற்றப்பா எனப்படுவர். சிற்றப்பாவை சித்தப்பா என அழைப்பது போன்று சிற்றன்னையைச் சித்தி என அழைப்பது நடைமுறையாகும். |
சேர் | நிறைக்கான ஒரு எடுத்தல் அளவை ஆகும். |
சொந்தம் | தனக்குரியது |
செம்மொழி | தொன்மை |
சேர்வு | சேர்ந்திருத்தல் |
சமம் | போர் |
சண்டியர் | வீண்வம்பு செய்பவர்கள் |
சலவைக்கட்டி | சவர்க்காரம் |
சிறு பொழுதுகள் | ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள் |
செம்மல் | பூவின் வாடி வதங்கிய நிலை |
சூளுரை | உறுதிமொழி |