ச - வரிசை 3 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
சிதம்பரம் | திருத்தில்லை, கடவுளின் உறைவிடம் |
சித்தார்த்தன் | புத்தன் |
சிலம்பன் | முருகன், குறிஞ்சிநிலத்தலைவன் |
சினேந்திரன் | அருகன், புத்தன் |
சீதரன் | அரி, திருமால் |
சீபதி | அருகன், கடவுள், திருமால் |
சுகதன் | புத்தன், அருகன் |
சுகன் | கந்தருவன், வியாசர் மகனாகிய சுகர் |
சுகுணம் | நற்குணன் |
சுதாகரன் | கருடன், சந்திரன், ஓர் அரசன் |
சுந்தரம் | எழில் |
சுந்தரன் | அழகன் |
சுபன்னன் | கருடன் |
சுரேசன் | இந்திரன், ஈசானன், முருகன் |
செங்கணான் | திருமால் |
செஞ்சடையோன் | சிவன், வயிரவன், வீரபத்திரன் |
செந்தில் | முருகன் |
செல்வம் | செல்வம் உடையவன்,பணம் |
செவ்வேள் | முருகன் |
செழியன் | செழிப்புடையவன், பாண்டிய மன்னன் |