ச - வரிசை 27 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
செத்து | கருதி. அரவுநீ ருணல்செத்து (கலித். 45) |
சொத்து | உடலிற்பூசும் இரத்தம் போன்ற செம்பசை. சொத்துப் பூசிக்கொண்டன். (W.) |
சோற்றி | மரத்தினுள்வெளிறு |
சி | A feminine suffix, as in ஆய்ச்சி |
சின் | ஒர் அசைச்சொல். காப்பும் பூண்டிசின் (தொல். சொல். 277) |
சு | Prefix of sanskrit words signifying goodness auspiciousness as சுகுணம் |
செய்தே | வினைநிகழ்ந்து கொண்டிருத்தலைக் குறித்தற்குச் செயவெனெச்சத்துடன் வரும் ஒரு துணைவினை. குணவிசிஷ்டவஸ்து தோற்றா நிற்கச் செய்தேயும். (ஈடு, 1, 1, 6) |
சென்றது | வினாவொடு சேர்ந்து அடுக்கியும் அடுக்காதும் வரும் அசைநிலை. (தொல். சொல். 425.) (Obs.) |
சோ | வியப்புப்பொருளைத் தரும் இடைச்சொல். (Loc.) |
சௌத்திரன் | முதன்மூன்று குலத்தைச் சேர்ந்த ஒருவனுக்குச் சூத்திரச்திரீயிடம் பிறந்தவன். (சங். அக.) |
சாக்காடு | சாவு. உறங்குவது போலுஞ் சாக்காடு (குறள், 339). |
சிந்தூரப்பொட்டு | குங்குமப்பொட்டு. (w.) |
செங்கடுக்காய் | செந்நிறமுள்ள கடுக்காய்வகை. (பதார்த்த.972.) |
சமனியகரணி | விரணத்தையும் தழும்பையும் நீக்குமருந்து. (பிங்.) |
சிம்புதெறி | சிராயாதல். (w.) |
சிரமன் | அடிமை |
சைவம் | ஊர்த்தசைவம் |
சௌமன் | புதன். (w.) |
சுவேதநீர் | வீரியம். (நன்.268, உரை.) |
சிவப்போணான் | சீத்தியோணான. (W.) |