ச - வரிசை 26 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சமூலம்

வேர்முதல் இலையீறுகவுள்ள எல்லாம். (தைலவ. தைல. 41.) முழுவதும்.

சிறுபான்மை

சிலவிடங்களில். சில சிறுபான்மை வருமே (பன்னிருபா. 264).
சில. இவற்றுட் சிறுபாண்மையிங்ஙனம் வரும்.

சுமார்

ஏறக்குறைய
மட்டம்
விலை சுமார்தான்

சுயம்

சொந்தமானது. இந்தவேலை அவன் சுயம்
(adj.)சொந்தமான
தானாகக் கட்டிய பாட்டு. (adj.) கலப்பற்ற. சுயம் பால்
கலப்பற்ற. சமயம் பால். Loc.

செம்மா

இறுமாத்தல். மிகப்பட்டுச்செம்மாக்குங் கீழ் (குறள், 1074).
மிகக்களித்தல். மதுவுண்டு செம்மருந் தண்சுரும்பு (பெரியபு. ஆனாய. 20).
வீறு பெறுதல். அண்ணல் செம்மாந்திருந்தானே (சீவக. 2358).

சகுனம்

நமித்தக் கலை

சந்திரன்சிப்பி

முத்துச்சிப்பி. (யாழ்.அக.)

சாப்பு

ஆடம்பரமற்ற. அவன் மிகவும் சாப்பாயிருப்பவன்.
நேர்மையான
நகல்

சித்தி

சிறிய தாய்

சித்தி

அணிமா
மகிமா
கரிமா
லகிமா
பிராத்தி
பிராகாமியம்
ஈசத்துவம்
வசித்துவம்

சில்

வட்டமானது
உருளை
ஒருவகைத் தலையணி
சில
அற்பமான. விராவு சில்லுணா மிசைந்தனர் (கந்தபு.வள்.209).
நுண்மையான. (திருக்கோ. 196, உரை.)
சிறு துண்டு. கண்ணாடிச்சில்.
ஓட்டுச்சீலை
கடற்சில்

சின்னூல்

சிறுநுல். சின்னுல் என்றதுபோல(பதிற்றுப்.76, உரை)
நேமிநாதம். சின்னுலுரைத்தகுண வீரபண்டிதன்(தொண்டை.சத.32)
சின்னுலுரைத்தகுண வீரபண்டிதன்(தொண்டை.சத.32)

சுவேலை

சுவேலம். சுவேலை நெடுஞ் சிலம்பின் (சேதுபு.இராமனருச் .9)

செய

வெற்றிக்குறிப்பான சொல். துந்துமியுடனே செயசத்தஞ் சேர்ந்தன வன்றே (சிவரக. தேவி. நாட். 3)
ஆண்டு அறுபதனுள் 28-ஆம் வருஷம்

செலு

மீன்செதிள். செலுவுட் கரந்தவாழி (அஷ்டப். திருவரங். மா. 22)
நறுவிலி
மெலிந்த. செலுநாய்

செவ்விது

நேரானது
நன்று. செவ்விதென்றவனுநோ (கம்பரா. வேள்வி. 3.)

சங்கிலி

தொடர்
ஆபரணம்
ஒரு நில அளவு

சாமர்த்தியம்

சாத்திய படாத விடயத்தை சாத்திய பட வைக்கும் திறமை

With, together, used as a prefix in Sanskritic words, as சமூலம்
உடன் என்னும் பொருளதாய் வடசொற்களில் மொழிக்கு முன்னாக வரும் இடைச்சொல்.

சீவரர்

(சீவரந்தரித்தோர்) பருத்த பிட்சுக்கள்