ச - வரிசை 23 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
சாசுவாதம் | நிலையானது. |
சாடை மாடையாக | மறைமுகமாக. |
சாட்சாத் | ஆதாரபூர்வமாக. |
சாயபு | இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரைக் குறிப்பிடும் சொல். |
சாயம் வெளுத்தது | கூறிய பொய் முதலான செயல்கள் தெரிந்து உண்மை அறியப்பட்டது. |
சால்ஜாப்பு | பாசாங்கு. |
சாவுகிராக்கி | எரிச்சலைத் தூண்டும் நபர். |
சாவு மணி | தீயவை அழிதலைக் குறிப்பது. |
சிக்கி முக்கிக் கல் | நெருப்பை உண்டாக்கக் கூடிய கல் வகை. |
சிங்கப் பல் | மேல் வரிசையில் கோரைப் பல்லுக்குச் சற்று முன் நீண்டு முளைத்திருக்கும் பல். |
சிங்கினாதம் | முசுடு பண்ணுதல். |
சுத்தமோட்சம் | கிரகணம் முற்றும் விடுகை |
சொட்டைவாளை | அம்பட்டன்வாளை |
சீமையல்லி | சீமையல்லி மெக்ஸிகோ,அமெரிக்கா போன்ற இடங்களில் அதிகமாக வாழும் ஒருவகை மலரினமாகும். |
சீமைமாதுளம்பழம் | சீமைமாதுளை |
செங்கொடிமுந்திரி | செந்திராட்சை |
சிறுகுறிஞ்சான் | அமுதுபுஷ்பம் |
சூரியப் பத்திரி | சோரப் பத்திரி |
சிவப்பு சந்தனம் | செங்குங்குமம் |
சொல் | ஒரு மொழியில் ஒரு கூற்றின் (சொற்றொடரின்) பொருள் தரும் ஒரு கூறு; பல சொற்கள் தக்கவாறு சேர்ந்து பொருள்தரும் ஒரு கூற்று ஆகும்; பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் போன்றவை சொற்களின் சில வகைகள்; வார்த்தை |