ச - வரிசை 22 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சப்புக் கொட்டு

தின்பண்ட ருசி.

சப்பைக்கட்டு

குற்றத்தை மறைத்து வலிந்து பாராட்டிப் பண்புரைத்தல்.

சமய சஞ்சிவி

தக்க தருணத்தில் உதவுபவன்.

சமயோசிதம்

இடத்திற்குப் பொருத்தமாக.

சமேதராக

ஒன்று கூடி இணைந்து.

சமோசா

தின் பண்ட வகை.

சம்போகம்

உடலுறவு.

சரடு விடுதல்

பொய் : புனைந்துரை.

சரமாரியாக

அடுக்கடுக்காக
ஒன்றன் பின் ஒன்றாக

சரேலென்று

வேகமாக : விரைந்து.

சர்வர்

உணவு விடுதியில் உணவு பரிமாறுபவர்.

சர்வே

நில அளவை.

சலசலப்பு

ஒலி எழுதல்

சலூன்

முடிதிருத்தகம்
சிகை அழககம்
சிகையலங்கரகம்

சல்லடை போட்டுத் தேடு

துருவித் தேடு.

சவக்களை

பொலிவிழந்த தோற்றம்.

சளசள என்று

ஓயாத பேச்சு.

சாகபட்சிணி

தாவரங்களை உண்ணும் உயிரினம்.

சாக்குப் போக்கு

வலிமையில்லாத காரணம்.

சாங்கோபாங்கமாக

மிக விரிவாக.