ச - வரிசை 2 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சக்தி

ஆற்றல்
வலிமை

சகாதேவன்

பாண்டவர்களின் இளையோன்

சங்கரன்

நன்மை செய்பவன், சிவன்

சசி

இந்திராணி, சந்திரன், பச்சைக்கருப்பூரம், கடல், மழை

சச்சந்தன்

ஏமாங்கத நாட்டரசன்

சஞ்சயன்

கௌரவர் புரோகிதன்

சண்முகன்

ஆறுமுகன், முருகன்

சத்தன்

சிவன், ஆற்றலுடையவன், அருவத்திருமேனி கொண்டவன்

சந்திமான்

இடையெழுவள்ளல்களுள் ஒருவன்

சந்திரன்

மதி,நிலவு

சமீரணன்

காற்று, வாயுதேவன்

சம்பன்னன்

நிறையுள்ளவன்

சுயம்பு

அருகன், சிவன், சுயம்பு

சரணியன்

இரட்சகன்

சனந்தன்

நான்முகன் மக்கள் நால்வரின் ஒருவன்

சனார்த்தனன்

திருமால்

சாகதன்

வீரன்

சாணன்

அறிவாற்றல் மிக்கவன்

சாம்பவன்

இராமன் படைத்தலைவரில் ஒருவன், சிவன்

சிசுபாலன்

இடையெழு வள்ளன்களில் ஒருவன்