ச - வரிசை 18 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சலநிதி

கடவுள்

சவரிமுத்து

தவமிருக்கும் முத்துக்குமரன்

சனாதிநாதன்

அரசன், திருமால்

சாமகானன்

சிவன்

சாரங்கபாணி

திருமால்

சாரங்கன்

சிவன், திருமால்

சாலவகன்

திருமால்

சாவித்திரன்

காற்று, சூரியன், நான்முகன், சிவன்

சிகாமணி

முதன்மையானவன், சிறந்தோன்

சிகித்துவசன்

ஒரு அரசன், முருகன்

சிங்கடியப்பன்

சுந்தரமூர்த்தி நாயனார்

சிசுபாலகன்

கண்ணன்

சிதம்பரப்பிள்ளை

சிதம்பரத்தின் மகன்

சித்தசேனன்

முருகன்

சித்தாந்தன்

சிவன்

சித்திராயுதன்

ஒரு கந்தருவன்

சித்துரூபன்

கடவுள்

சிந்துநாதன்

வருணன்

சிவசித்தர்

சைவ சமயத்திற்குரிய பரமுத்தியை அடைந்தவர்

சிவஞானம்

தெய்வ அறிவு, பதி உணர்வு