ச - வரிசை 16 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சிதம்பர ரகசியம்

அளவுக்கதிகமாகப் பாதுகாக்கப்படும் இரகசியம்.

சித்தாள்

கூலி வேலை செய்யும் நபர்

சிம்ம சொப்பனம்

சிம்ம சொப்பனம்

சிரேஷ்டம்

சிறப்புடையது

சில்மிஷம்

குறும்பு

சிறு பிள்ளைத்தனம்

பொறுப்பில்லாத நிலை.

சின்னப் புத்தி

குறுகிய மனப்பான்மை.

சுங்கம்

ஆயம்

சுங்கச் சாற்றுரை

ஆயச் சாற்றுரை

சுங்கத் தீர்வை

ஆயத் தீர்வை

சகபதி

அரசன், கடவுள்

சகாந்தகன்

சாலிவாகனன், விக்கிரமார்க்கன்

சக்கரதரன்

திருமால்

சக்கரதாரி

திருமால்

சக்கிரபாலன்

அதிபதி

சங்கபாணி

திருமால்

சங்கமேந்தி

திருமால்

சசிமணாளன்

இந்திரன்

சச்சிதாநந்தம்

உண்மை, அறிவு, இன்பம் என்னும் முக்குணங்களுடைய பரம்பொருள்

சஞ்சன்

நான்முகன்