ச - வரிசை 15 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சப்தம்

ஒலி

சான்று

தகவலை உண்மை என்று நிறுவுவது
(ஒன்றின்) ஆரம்ப இடம் அல்லது மூலம்
அடிப்படை
பற்றுக்கோடு
பிரமாணம்
(உயிருக்கு ஆதாரமாகும்) உடம்பு
அத்தாட்சிப் பத்திரம்

சௌகரியம்

வசதி

சந்தோசம்

மகிழ்ச்சி

சங்கமேஸ்வரர்

கூடுதுறையார்

சூட்சுமானா

சுழிமுனை

சுய இன்பம்

தன்னால் தனக்கு ஏற்படுத்தும் இன்பம்

சூத்திரம்

நூல்

சீக்காளி

நோயாளி.

சீண்டுதல்

வெறுப்பு உண்டாக்குதல்.

சீமையெண்ணெய்

மண்ணெண்ணெய்.

சீலைப் பேன்

ஆடைகளில் தொற்றும் பேன்.

சுக்கு நூறாக

சிறு சிறு துண்டுகளாக.

சுயபுராணம்

தன்னைப் பற்றிய பேச்சு

சுயரூபம்

உண்மையான இயல்பு : தன்மை.

சுயார்ஜிதம்

சுய சம்பாத்தியம்.

சுரண்டல்

பிறர் செல்வம் உழைப்பு முதலியவற்றைத் தன்னுடைய நலத்துக்காகப் பயன் படுத்தல்.

சிடுசிடுப்பு

எரிச்சல் கலந்த சினம்.

சிணுங்குதல்

மெல்லிய அழுகை.

சிண்டு முடி

ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் குற்றம் சொல்லிச் சண்டை மூட்டி விடு.