ச - வரிசை 12 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
சகஜம் | இயல்பு, வழக்கம் |
சர்வஜனவாக்கெடுப்பு | பொதுவாக்கெடுப்பு |
சரணாகதி | அடிபணிவு |
சரீரம் | உடல் |
சலதோஷம் | தடுமம் |
சவம் | பிணம் |
சவரம் | மழிப்பு |
சன்மார்க்கம் | நன்னெறி |
சாட்சி | சான்று |
சாத்தியமான | இயலக்கூடிய |
சாதகம் | ஆதரவு |
சாதாரணமாய் | இயல்பாய்,எளிதாய் |
சாந்தம் | அடக்கம் |
சாந்தி | திருமுற்றம் |
சாம்ராச்சியம் | பேரரசு |
சாமான்யன் | எளியவன் |
சாயரட்சை | மாலை |
சாரம் | பிழிவு |
சாராம்சம் | பிழிவு |
சாவகாசம் | ஓய்வு |