ச - வரிசை 10 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
சுளையாக | கணிசமாக |
சுறுசுறு என்று | விரைவாக, பரபரப்பாக |
சுற்றிப்போடு | மிளகாய், மண், உப்பு முதலியவற்றைக் கொண்டு திருஷ்டிக்கழி. |
சூடுசுரணை | எதிர்த்துச் செயல்படவேண்டும் என்கிற உணர்வு. |
சூடு பிடிப்பது | தீவிரமாகச் செயற்படுதல். |
சூட்டிகை | புத்திக்கூர்மை, அறிவுக் கூர்மை |
சூட்டோடு சூடாக | ஒரு செயலை நடத்திய நிலையில் தொடர்ந்து மேவுதல் |
சூத்திரதாரி | பின்னால் இருந்து இயக்குபவன் |
சூரப்புலி | துணிச்சல் உள்ளவர் |
சிஷ்ய கோடி | மாணவர் குழாம். |
சுவிசேஷம் | நற்செய்தி |
சின்ன வீடு | மனைவி இருக்கும் போது வேறு ஒருத்தியோடு தனியாக நடத்தும் குடும்பம். |
சாம்பல் கதிர்குருவி | ashy prinia |
சந்தவானடக்கி | வாதமடக்கி. |
சகோதரி | உடன்பிறந்தாள் |
சக்கரம் | உருளை |
சக்கரவர்த்தி | பேரரசன் |
சகலமும் | எல்லாமும் |
சகா | தோழர் |
சகிப்பு | பொறை |