ச - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
சீமான் | செல்வந்தன் |
சீமாட்டி | செல்வமுள்ளவள் |
செருக்கு | அகங்காரம் |
சிலப்பதி | உட்பொருள் |
செந்தாழை | செதில்கள் போன்ற சொர சொரப்பான மேல்தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப் பகுதியையும் உடைய பெரிய பழம். |
சுவாசம் | மூச்சு |
சொப்பனம் | கனவு |
சாதம் | சோறு |
சம்மேளனம் | கூட்டமைப்பு |
சத்தியம் | வாய்மை; உண்மை |
சரித்திரம் | வரலாறு |
சாதாரண | இயல்பான |
சௌக்கியம் | நலம் |
சரசுவதி | கலைமகள் |
சகோதரன் | உடன் பிறந்தவன் |
சக | உடன் |
சமுத்திரம் | பெருங்கடல் |
சிநேகம் | நட்பு |
சங்கீதம் | இசை |
சுய | தன் |