கண் | விழி. (தொல். எழுத். 7.) கண்ணோட்டம். கண்ணின்று பெயர்ப்பினும் (தொல். பொ. 150). பீலிக்கண். ஆயிரங்கணுடையாய்க்கு (கம்பரா. பம்பை. 27). தேங்காய் பனங்காய்களின் கண். முலைக்கண். துவாரம். கால்வாய்த் தலையின்கண்கள் (பாரத. முதற். 72). புண்ணின்கண். மரக்கணு. மரக்கண்ணோ மண்ணாள்வார் கண் (முத்தொள். பெருந்தொ. 634). முரசு முதலியவற்றில் அடிக்குமிடம். கண்மகிழ்ந்து துடிவிம்ம (பு. வெ. 2, 8, கொளு).10. Bamboo மூங்கில். (திவா.)1 பெருமை. (திவா.)1 ஞானம். கள்ளொற்றிக் கண்சாய்பவர் (குறள், 927).1 உணர்த்துவது. சொன்னசிவன் கண்ணா (சி. போ. 5, 2, 1).1 பீசம். நாதமாஞ் சத்தியதன் கண்ணாம் (சி. போ. 9, 3, 3).1 பாயின் நெட்டிழையாகிய நூல். (G. Tn. D. i, 220.)1 இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058).1 முன்பு. கண்ணின்றிரப்பவர் (குறள், 1055).1 பற்றுக்கோடு. கண்ணன் கண்ணல்ல தில்லையோர் கண்ணே (திவ். திருவாய். 2, 2, 7).1 உடம்பு. பொன்கட்பச்சை (பரிபா. 3, 82). -part. ஏழுனுருபு. (நன். 302.) ஓர் அசை. மீன்கணற்று (புறநா. 109, 10). உபசர்க்கம். களிற்றினுங் கண்ணஞ்சா வேற்றை (கலித். 101, 35). |
காலை | பொழுது வாணாள். நோகோயானே தேய்கமா காலை (புறநா. 234). தருணம். காலைய தறிந்தனை (கந்தபு. திருவவ. 14). முறை. முக்காலைக் கொட்டினுள் (நாலடி, 24). விடியற்காலம். காலைக்குச் செய்தநன்றென்கொல் (குறள், 1225) சூரியன். காலை யன்ன சீர்கால் வாய்மொழி (பதிற்றுப். 21, 4) பகல். எல்லியிது காலையிது ெ்வன்ப தறிகல்லாள் (சீவக. 1877). பள்ளியெழுச்சி முரசம். மேல்வந்தான் காலைபோல் ... துயிலோ வெடுப்புக (கலித். 70) காலம்பெற. (W.) பொழுதில். அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் (நாலடி, 68). |