க - வரிசை 92 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
குழிபறி | சதிசெய். |
குழையடி | ஒருவனை முகத்துதி செய். |
குளுகுளு என்று | இதமாக : இனிதாக. |
குள்ளநரி | தந்திக்காரன். |
குஷி | மகிழ்ச்சி. |
கூடக்குறைய | அதிகமாக வேறுபாடு இன்மை. |
கூடமாட | உடனிருந்து துணையாக. |
கூடிய மட்டும் | இயன்ற அளவு. |
கூடுமான வரை | கூடிய மட்டும் |
கூட்டாஞ் சோறு | அரிசி, பருப்பு, காய் கறி முதலியன சேர்த்து வேகவைத்துத் தயாரிக்கும் உணவு : உல்லாசப் பயணத்தின் போது அனைவரும் கூடியிருந்து கொள்ளும் உணவு. |
கூட்டாளி | உடனிருந்து உரிமையோடு தொழில் செய்பவன். |
கூட்டிக்கொடு | சுயலாபத்தக்காக ஒரு பெண்ணைப் பயன் படுத்தும் வகை. |
கூண்டோடு | இனம், உறவு முதலான யாவும். |
கூத்தடித்தல் | தகாத முறையில் வாழ்க்கையில் இன்பம் துய்த்தல். |
கூலிக்கு மாரடி | பொறுப்புணர்ச்சியின்றி வேலை செய். |
கூலிப்பட்டாளம் | கிளர்ச்சியை அடக்கு முறை கொண்டு கட்டுப்படுத்த கூலியாட்களைப் பணம் கொடுத்து அமர்த்தும் வகை. |
கூஜா | சிறு சேவைகள் செய்து அடங்கி நடப்பவன். |
கெட்டிமேளம் | திருமணத்தில் தாலி , கங்கணம் முதலிய கட்டும் போது எல்லா வாத்தியமும் கூட்டாகக் கொட்டப்படும் மேளம். |
கெலித்தல் | போட்டியில் வெற்றியடைதல். |
கேடுகாலம் | தீங்கு வரும் காலம். |