க - வரிசை 90 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கிறுக்கல்

எழுத்தைப் படிக்க முடியாதவாறு எழுதுதல்.

கிறுக்கன்

அறிவுகலங்கியவன் : பைத்தியக்காரன்.

கிறுகிறுப்பு

தலைச் சுற்றல்.

கீச்சுக்குரல்

காதைத் துளைக்கும் ஒலி.

கீழ்ப்பாய்ச்சிக் கட்டுதல்

வேட்டியை மடித்துவைத்துக் கட்டும் வகை.

குசலம் விசாரிப்பு

நலன் விசாரித்தல்.

குசுகுசு

காதில் இரகசியம் பேசுதல்.

குச்சு மட்டை

வெள்ளையடிக்கப் பயன் படுத்தும் மட்டை.

குடலைப்பிடுங்கி

பசியால் வருத்தும் வயிற்று நோய்.

குடிகாரன்

மதுபானம் அதிகமாகக் குடிப்பவன்.

குடிகேடன்

குடும்பப் பெருமையைக் கெடுப்பவன்.

குடிபோதை

மது மயக்கம்.

குடிவெறி

குடிபோதை

குடுகுடுப்பை

உடுக்கை வடிவில் அமைந்து ஒலியெழுப்பு கருவி.

குடும்பஸ்தன்

மனைவி மக்களோடு வாழ்பவன்.

குடும்பி

பெரிய குடும்பத்தையுடையவன்.

குட்டிச்சாத்தான்

குறும்பு செய்யும் குழந்தைகளைச் செல்லமாக அழைத்தல்.

குட்டிச்சுவர்

சீரழிவு : பயனற்றது.

குட்டிப் போட்ட பூனை

வீட்டையே சுற்றி வந்து வேலையின்றி ஒருவரை அடுத்து வாழ்பவன்.

குட்டையைக் குழப்புதல்

குழப்பம் விளைவித்தல் : கலகம் செய்தல்.