க - வரிசை 89 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கிட்டத்தட்ட | ஏறக்குறைய |
கிட்டிப்புள் | சிறுமரத்துண்டை வைத்துச் சிறுவர் ஆடும் விளையாட்டு. |
கிட்டுதல் | அடைதல் : நெருங்குதல். |
கிட்டே | அண்மையில் : பக்கத்தில். |
கிணற்றுத்தவளை | பரந்த அநுபவம் இல்லாதவர். |
கிம்பளம் | இலஞ்சப்பணம். |
கிரகிப்பு | மனத்தில் இருத்திக் கொள்ளும் தன்மை. |
கிராக்கிப்படி | அகவிலைப்படி. |
கிராதகம் | கொடுமை. |
கிராதகி | கொடுமைக்காரி. |
கிராப்பு | தலைமுடி அலங்கார ஒப்பனை. |
கிராமிய | நாட்டுப்புறம் சார்ந்த. |
கிழக்கோட்டான் | வயது மூத்தோரை அவமதிப்பாகக் குறித்தல். |
கிழடு | முதுமையுடையவர். |
கிழடு கட்டை | முதுமை உடையவர் |
கிழம் | கிழடு கட்டை |
கிழிப்பவன் | திறமையற்றவனின் செயற்பாடு குறித்து வெறுப்புடன் குறித்தல். |
கிளுகிளுப்பு | மனக்கிளர்ச்சியான உணர்வு. |
கிள்ளியெறி | நீக்கு. |
கிள்ளுக்கீரை | அற்பமான ஒன்று. |