க - வரிசை 85 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கள்ளங்கபடம் | பொய்,களவு, வஞ்சனை போன்ற செயல். |
கள்ளச்சந்தை | அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ளதை உரிமையின்றித் திருட்டுத்தனமாக விற்றல். |
கள்ளச்சாவி | களவாடும் நோக்கத்தில் பூட்டைத் திறக்கப் பயன்படும் மாற்றுச்சாவி. |
கள்ளத்தோணி | அனுமதியின்றி பொருள்களைக் கடத்திச் செல்லப் பயன்படுத்தும் படகு. |
கறுப்புக்கொடி | எதிர்ப்பு அல்லது துக்கததைக் குறிக்கும் அடையாளமாகப் பயன் படுத்தும் கறுப்புத்துணி. |
கற்றுக்குட்டி | ஒரு வேலையில் புதிதாகச் சேர்ந்து செய்பவன்: அரைகுறையாகத் தெரிந்தவன். |
கனரகத் தொழில் | பெரிய இயந்திரங்கள் செய்யும் தொழில். |
கனவு காணுதல் | மனத்தில் தேவையற்ற ஆசைகளை வளர்த்தல். |
கன்னக் கோல் | சுவரில் ஓட்டை போட திருடர்கள் பயன்படுத்தும் கருவி. |
கன்னங்கரேல் | மிகவும் கறுப்பாக. |
கஜகர்ணம் | பெரு முயற்சி. |
கஜானா | கருவூலம் |
கஷ்ட நஷ்டம் | துன்பச் சூழல். |
கஷாயம் | வடிக்கப்பட்ட மருந்து வகை. |
கஸ்தூரி | கஸ்தூரி மானிடமிருந்து பெறப்படும் வாசனைப்பொருள். |
கஸரத்து | கடுமையான உடற் பயிற்சி. |
காக்காய்க்கடி | சிறுவர்கள் எச்சில் படாமல் தின்பண்டம் போன்றவற்றைத் துணியால் மூடிக்கடிக்கும் வகை. |
காக்காய்க்குளியல் | உடலை நனைத்துக் கொள்ளாது தண்ணீரை அள்ளித் தலையில் தெளித்துக் கொள்ளுதல். |
காக்காய்ப்பொன் | சிவந்த பொன்னிறத்தில் இருக்கும் ஒரு வகைத்தகடு. |
காக்காய்ப்பிடித்தல் | தன் நன்மை கருதி ஒருவருக்கு வேண்டியவை செய்து மகிழ்வித்தல். |